
லாகூர், மார்ச் 15 – பாகிஸ்தானின் முக்கிய எதிர்கட்சி தலைவர் இம்ரான் கானை கைது செய்யும் முயற்சியின்போது, போலீஸ்காரர்களுக்கும், இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது.
லாகூரில் (Lahore ) , இரவு நேரத்தில் , இம்ரான் கானின் வீட்டு வளாகத்திற்கு முன் இந்த பதற்ற நிலை உருவாகியது. தங்களின் மீது கற்களையும், கட்டைகளையும் தூக்கி வீசிய ஆர்ப்பாட்டக்காரர்களை களையச் செய்ய, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இதனிடையே, 70 வயதாகும் இம்ரான் கான் ,வரும் மார்ச் 18-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி தமக்கு நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், முன்கூட்டியே போலீசார் தம்மை கைது செய்ய முயற்சிப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.