
இஸ்லாமபாத், ஜன 11 – பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் Imran Khan-னுக்கு எதிராக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் கைது வாராண்ட் பிறப்பித்துள்ளது. தேர்தல் ஆணையம் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கு தொடர்பாக விளக்கம் கேட்டு பல முறை நோட்டிஸ் அனுப்பியும் அதற்கு இம்ரான் கான் எந்தவொரு பதிலும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இம்ரான் கானுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்த தேர்தல் ஆணையம் இது தொடர்பான அடுத்த கட்ட விசாரணையை இம்மாதம் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.