
சென்னை, ஜூன் 8 – 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரைப்பட உலகை ஆக்கிரமித்திருக்கும் கமல்ஹாசனை ஒருவர் கவர்ந்திருக்கின்றார் அது கண்டிப்பாக லோகேஷ் கனகராஜ் – ஆகத்தான் இருக்கக் கூடும்.
ஏனெனில், விக்ரம் பட வெற்றியை அடுத்து, அப்படத்தின் இயக்குனரான லோகேஷிற்கு விலையுயர்ந்த லெக்சஸ் (Lexus) காரை அவர் பரிசளித்திருக்கின்றார்.
அக்காருக்கான சாவியை கமல் லோகேஷிடம் வழங்கும் புகைப்படம் வெளியாகி தமிழ் திரையுலகில் அது பேசு பொருளாகியிருக்கின்றது.
இதனிடையே, இயக்குநருக்கு காரை பரிசளித்த கமல், விக்ரம் படத்தில் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய 13 பேருக்கு பைக்கை பரிசாக வழங்கியிருக்கின்றார்.
படத்தின் வெற்றிக்காக உழைத்தவர்களை மகிழ்விக்கும் வகையில் கமல் செய்த அந்த செயல் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.