
தமிழ்நாடு, ஆகஸ்ட்டு 29 – தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், முதல் படத்தை இயக்க போவதாக அதிராப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2009-ஆம் ஆண்டு, நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தில், “நா அடிச்சா தாங்க மாட்ட” பாடலில் சஞ்சை போட்ட ஆட்டம் பலரது கவனத்தை ஈர்த்தது.
அதன் பின்னர், குழந்தை நட்சத்திரமாக சஞ்சய் அவதாரம் எடுப்பார் என பரவலாக எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், பட்டப்படிப்பை முடிக்க அவர் வெளிநாடு சென்றார்.
பிரேமம் இயக்குனர் அல்போன்சு புத்திரன், சஞ்சையை கதாநாயகனாக அறிமுகம் செய்ய ஒருமுறை கதை ஒன்றை கூறியிருந்தார். ஆனால், நடிப்பில் ஆர்வமில்லை என்றும், இயக்குனராக விரும்புவதாகவும் கூறிய சஞ்சை சில குறுப்படங்களையும் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், சுபாஸ்கரனின் லைகா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை சஞ்சய் இயக்கவுள்ளதாக, அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த படத்திற்கான ஒப்பந்தத்தில் சஞ்சய் கையெழுத்திடும் புகைப்படங்களை, லைகா நிறுவனம் தனது டிவிட்டரில்(எக்ஸ்) பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.