Latestமலேசியா

இயக்குனரும் நடிகருமான கஜேந்திரன் காலமானார்

சென்னை, பிப் 5- பிரபல இயக்குனரும் நடிகருமான டி.பி கஜேந்திரன் உடல் நலக் குறைவு காரணமாக இன்று சென்னையிலுள்ள அவரது வீட்டில் காலமானார். சிறு நீரக பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சைக்குப் பின் நேற்று வீடு திரும்பிய அவர் இன்று அதிகாரையில் இறந்தார். 100க்கும் மேற்பட்ட படங்களில் 68 வயதுடைய கஜேந்திரன் நடித்துள்ளார். பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர பாகங்களிலும் அவர் சிறத் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுதவிர வீடு மனைவி மக்கள், பாண்டி நாட்டு தங்கம் , பட் ஜட் பத்மநாபன் , மிடில் கிளாஸ் மாதவன் உட்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய பெருமையும் கஜேந்திரனுக்கு உண்டு.

நடிகர் விசுவைப் போன்ற பெரும்பாலும் குடும்ப பாங்கான படங்களை இயக்கியிருக்கும் கஜேந்திரன் மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் நடுத்தர குடும்பம் எதிர்நோக்கும் பிரச்னையை சுட்டிக்காட்டியிருந்தார். நேற்று பழம் பெரும் பாடகி வாணி ஜெயராம் மறைந்த நிலையில் இன்று இயக்குனர் டி.பி கஜேந்திரன் மரணத்தினால் திரையுலகினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!