
சென்னை , மே 10 – இயக்குனராகவும் நடிகராகவும் திரைத்துறையில் தடம் பதித்து 300க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த மனோபாலா அண்மையில் திடீரென மரணம் அடைந்தது ரசிகர்களிடையே பெரிய அதிர்சியை ஏற்படுத்தியது. திரைப்படங்களில் தனது கலகலப்பான நடிப்பால் அனைவரையும் சிரிக்க வைத்து மகிழச் செய்த நடிகர் மனோபாலா தமது இறுதி காலத்தில் பேச முடியாமல் இருந்த காட்சியைக் கொண்ட வீடியோவை அவரது மகன் வெளியிட்டுள்ளார். மனோபாலா பேசமுடியாமல் மிகவும் பலவீனமாக இருப்பதும் அவருக்காக அவரது மகன் பாடும் காட்சியும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள நிலையில் அதைப்பார்ப்பவர்கள் மனதில் வேதனையை பிழிவதாக அமைந்துள்ளது.