Latestஉலகம்சினிமா

இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை ; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை, ஆகஸ்ட் 22 – காசோலை மோசடி செய்த வழக்கில், இயக்குனர் லிங்குசாமிக்கு சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கின்றது நீதிமன்றம்.
இந்த தகவல் தமிழ் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழில் , ஆனந்தம் , ரன் , சண்டக் கோழி, பீமா, பையா , வேட்டை போன்ற சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவரான லிங்குசாமியுடன் சேர்த்து, அவரது சகோதரர் சுபார் சந்திர போஸ்-சுக்கும் , சைதாப்பேட்டை நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனையை விதித்தது.

இதனிடையே தனக்கு எதிரான தண்டனையை எதிர்த்து , லிங்குசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!