Latestஉலகம்

இயந்திரத்தில் தீ ; நேப்பாள விமானம் அவசரமாக தரையிறக்கம்

காட்மண்டு , மார்ச் 10 – நேப்பாள விமானத்தின் இரண்டு இயந்திரங்களில் ஒன்றில் தீப்பிடித்ததற்கான அறிகுறி ஏற்பட்டதை தொடர்ந்து அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. காட்மண்டுவிலிருந்து பைரஹவா நகருக்கு 78 பேருடன் Shree Airlines விமானம் சேவையில் ஈடுபட்டிருந்தபோது அந்த விமானத்தின் இயந்திரத்தில் தீ ஏற்பட்டதற்காக அறிகுறியை விமானி கண்டறிந்து உடனடியாக கட்டுப்பாட்டு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அவ்விமானத்தை தரையிறக்கும்படி உத்தரவு பிறக்கப்பட்டது . காட்மண்டு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கப்பட்ட அந்த விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டதாக Shree Airline விமான நிறுவனத்தின் பேச்சாளர் Anil Manandhar தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!