
கோலாலம்பூர், ஜூன் 30 – இரட்டைக் கோட்டில் வாகனத்தை முந்திச் சென்றதோடு, அந்த செயலுக்காக சற்றும் குற்ற உணர்வு இன்றி நடந்துக் கொண்டிருக்கும் வாகனமோட்டி ஒருவரின் செயல், வலைத்தளவாசிகளின் கடுமையான குறை கூறல்களுக்கு ஆளாகியிருக்கின்றது.
அந்த பொறுப்பற்ற ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்திய ஆடவரின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கும் நிலையில் , அந்த சம்பவம் , பகாங், Janda Baik – கில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
அந்த காணொளியில், காரொன்று இடது புற சாலையில் புகுந்து, லாரியை முந்திச் செல்ல முற்பட்டது. எனினும் திடிரேன இடதுபுறத்தில் எதிரே காரொன்று வர , அக்கார் அவசரமாக பிரேக் வைத்ததால் விபத்து ஏற்படுவதை தவிர்க்க முடிந்தது.
எனினும், இந்த சூழ்நிலையிலும் தனது தவற்றை ஒப்புக் கொள்ளாமல் , லாரியே தனக்கு வழிவிடவில்லை என பொறுப்பற்ற முறையில் அந்த ஆடவர் பதிலை கூறியிருக்கின்றார்.
அதையடுத்து, வலைத்தளவாசிகள் பலரும் அந்த காரோட்டி மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருக்கின்றனர்.