Latestமலேசியா

இரண்டாம் கட்ட BPR தொகை மே 7 முதல் பகிர்ந்தளிக்கப்படும்

புத்ராஜெயா, மே 4 -இரண்டாம் கட்ட BPR  எனப்படும்  Prihatin Rakyat மக்கள் உதவித் தொகை, தகுதியானவர்களுக்கு இம்மாதம் 7- ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல்  கட்டம் கட்டமாக பகிர்ந்தளிக்கப்படும்.

அந்த இரண்டாம் கட்ட உதவித் தொகை, மொத்தம் 275 கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டை உட்படுத்தியிருப்பதாக, நிதியமைச்சர் தெங்கு டத்தோஶ்ரீ சஃப்ரூல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

இந்த இரண்டாம் கட்ட உதவித் திட்டத்தின் கீழ், 36 லட்சம் குடும்பத் தலைவர்களும், பத்து லட்சம் மூத்த குடிமக்களும், திருமணமாகாத  38 லட்சம் பேரும் பயனடைவர்.

இதற்கு முன்பு , 300 ரிங்கிட் உதவித்  தொகை பெற்ற  குடும்பத் தலைவர்களும், 150 ரிங்கிட் பெற்ற திருமணமாகாதவர்களும் , இந்த இரண்டாம் கட்டத்தில் 150 ரிங்கிட்டிலிருந்து  600 ரிங்கிட் வரை பெறுவார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!