Latestமலேசியாவிளையாட்டு
இரண்டாம் சுற்றிலே தோல்வி கண்டார் லீ சீ ஜியா

கோலாலம்பூர், ஜுன் 30 – சொந்த ரசிகர்களின் முன்னிலையில் களமிறங்கினாலும், நாட்டின் ஒற்றையர் பூப்பந்து விளையாட்டாளர் Lee Zii Jia, மலேசிய பொது விருதின் இரண்டாம் சுற்றிலே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உலகின் அந்த ஐந்தாம் நிலை ஆட்டக்காரர் , புக்கிட் ஜாலில் Axiata அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில், இந்தோனேசிய விளையாட்டாளர் Shesar Hiren Rhustavito- விடம் 19- 21, 21- 19, 16- 21 என்ற புள்ளிகளில் தோல்வி கண்டார்.
Zii Jia -வின் தோல்வியுடன், மலேசிய பொதுவிருதின் ஒற்றையர் பிரிவில் மலேசிய விளையாட்டாளர்களின் போட்டியும் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
மேலும் இதர ஒற்றையர் விளையாட்டாளர்களான Liew Daren, Ng Tze Yong இருவரும் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டனர்.