Latestமலேசியா

இரண்டாம் நிதி அமைச்சருடன் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை சார்ந்த கலந்துரையாடல் – ரமணன்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 28 – இரண்டாம் நிதியமைச்சர் டத்தோ ஸ்ரி அமீர் ஹம்சா அசிசா (Seri Amir Hamzah Azizan) உட்பட MOF வரவு செலவு அறிக்கை குழுவுடன் தொழில்முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் டத்தோ எவோன் பெனடிக்கும் (Ewon Benedick) துணையமைச்சர் டத்தோ ரமணனும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.

KUSKOP-யின் முன்முயற்சி திட்டங்கள் குறித்து 2025 ஆண்டிற்கான, இந்த கலந்துரையாடல் நிதி அமைச்சியில் நடைபெற்றது.

டத்தோ எவோன் பெனடிக்கின் தலைமையிலான KUSKOP-ஆனது குறு, சிறு, நடுத்தர தொழில்துறையினரின் தேவைகளுக்கு அக்கறையுடனும் விழிப்புடனும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், டத்தோ ரமணனும் இணைந்து இரண்டாம் நிதியமைச்சருக்குச் சில யோசனைகளையும் பரிந்துரைகளையும் இந்த கலந்துரையாடலில் வழங்கியுள்ளதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!