லாஸ் ஏஞ்சல்ஸ், ஆகஸ்ட் 21 – ஹாலிவுட்டில் பேட்மேனாக நடித்து பிரபலமான பென் அஃப்லெக் (Ben Affleck) மற்றும் அனகோண்டா பட நாயகி ஜெனிஃபர் லோபஸ் (Jennifer Lopez) இருவரும் இரண்டாவது முறையாக விவாகரத்து செய்கின்றனர்.
பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களான இவர்கள், இதற்கு முன்னரே 2003ஆம் ஆண்டு திருமணம் செய்து பின், விவாகரத்து பெற்றனர்.
அதன் பின்னர் 18 ஆண்டுகளுக்குப் பிறகு, 2022ஆம் ஆண்டில் இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது, 55 வயதாகும் ஜெனிஃபர் லோபஸ்க்கு இது நான்காவது விவாகரத்தாகும்.
அதேநேரம் 51 வயதை எட்டும் பென் அஃப்லெக்கிற்கு, இது இரண்டாவது விவாகரத்து என்பது குறிப்பிடத்தக்கது.