
இன்று அதிகாலை நடைபெற்ற, இந்திய பொது பூப்பந்து போட்டியின், இரண்டாவது சுற்றிலேயே தோல்வி கண்டு ஆட்டத்தை விட்டு வெளியேறினார், நாட்டின் ஒற்றையர் பூப்பந்து வீரர் லீ ஜி ஜியா.
சீன விளையாட்டாளர் லி சி பெங்கிடம் 11-21, 21-14, 18-21 எனும் செட்களில் ஜி ஜியா தோல்வியைத் தழுவினார்.
உலகின் 22-ஆம் நிலை ஆட்டக்காரரான லி சி பெங்கிடம், ஜி ஜியா வீழ்வது இது இரண்டாவது முறையாகும். 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சீன மாஸ்டர் பூப்பந்து போட்டியில் ஜி ஜியா முதல் முறையாக அவரிடன் தோல்விக் கண்டார்.
எனினும், கடந்தாண்டு நடைபெற்ற தாய்லாந்து பொதுவிருது பூப்பந்து போட்டியில் அந்த தோல்வியை ஜி ஜியா ஈடு செய்தார்.
இதனிடையே, Chen Tang Jie – Toh Ee Wei இணையும் இரண்டாவது சுற்றிலேயே சீன இணையிடம் தோல்வியைத் தழுவியது.