Latestமலேசியா

காட்டுப்பன்றி மோதியது; KLIA எக்ஸ்பிரஸ், KLIA டிரான்ஸிட் சேவைக்களுக்கான டிராக் சேதம்

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 9 – இன்று அதிகாலை காட்டுப்பன்றி மோதியதால், KLIA எக்ஸ்பிரஸ், KLIA டிரான்ஸிட் சேவைகள் தடைப்பட்டன.

புத்ராஜெயா, சைபர்ஜெயா நிலையங்களுக்கு அருகில் அதனால் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதனால், இன்று அதிகாலை மணி ஆறு தொடங்கி, KL சென்ட்ரல் மற்றும் KLIA டெமினல் 2 முனையத்திலிருந்து ஒருங்கிணைந்த இரயில் சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

20 நிமிட இடைவெளியில் அந்த சேவைகள் மேற்கொள்ளப்படும் என்பதோடு, KLIA எக்ஸ்பிரஸ் புறப்படும் தளத்திலிருந்து அந்த இரயில்கள் புறப்படும்.

அதனால், புதுப்பிக்கப்பட்ட அட்டவணை மற்றும் இரயில் புறப்படும் தளம் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள, பயணிகள் டிக்கெட் முகப்பை நாடலாம். அல்லது KLIA எக்ஸ்பிரஸ் முகநூல் மற்றும் ட்விட்டர் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் மேல் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!