கிவ், பிப் 25 – இரண்டாவது நாளாக, உக்ரேய்ன் தலைநகர் கிவ்-விலும் ( Kyiv ) அந்நகரைச் சுற்றியும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டன.
ரஷ்யா தொடுத்திருக்கும் அந்த தாக்குதலில் இதுவரை 137 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், 316 பேர் காயமடைந்திருப்பதாகவும், உக்ரேய்ன் அதிபர் Volodymyr Zelenskyy கூறியுள்ளார். கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் ராணுவ வீரர்கள் ஆவர்.
இந்நிலையில்,வான் – தரை மார்க்கமாக தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதலினால், உயிருக்கு அஞ்சி பலர் உக்ரேயினை விட்டு வெளியேறி வரும் நிலையில் , பலர் நிலத்தடி பகுதிகளில் அடைக்கலம் பெற்றுள்ளனர்.