Latestமலேசியா

இரண்டு கைகளும் இல்லாவிட்டாலும் கால்கள் மூலம் கார் ஓட்டும் ஆடவர்

மாச்சாங், பிப் 16 – பிறக்கும்போதே இரு கைகளும் இல்லாத நிலையில் மாற்று திறனாளியாக இருந்தாலும் இரு கால்களை பயன்படுத்தி கார் ஓட்டுவது குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாக 55 வயதுடைய Rahim Yusoff கூறுகிறார்.

கார் ஓட்டிக்கொண்டு Pulau Chondong கில் உள்ள தமது தையல் கடைக்கு செல்வது உட்பட தினசரி பணிகள் அனைத்தையும் கால்களை பயன்படுத்தியே செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 20 ஆண்டுகாலமாக கால்களை பயன்படுத்தியே கார் ஓட்டி வருவதாகவும் இதற்காக தமது காரில் எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார். எனினும் automatik gear காரை பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

விளையாட்டாளர்களுக்கான சமு நல அறவாரியம் ஏற்பாடு செய்த பயிற்சியில் பங்கேற்பதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 400 மீட்டர் தூரத்தைக் கொண்ட கோலாலம்பூருக்கு மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தமது காரை ஓட்டிவந்ததையும் அவர் பெருமையோடு தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!