Latestமலேசியா

இரண்டு கோடியே 19 லட்சம் மலேசியர்களின் தொலைப்பேசி எண்கள் கசிவா? மோசடி கும்பல்களிடம் விற்கப்பட்டனவா? ; அதிர்ச்சி தகவல்

உலகிலேயே, தனிநபர் விவரங்கள் அதிகம் களவாடப்படும் நாடுகள் பட்டியலில் மலேசியாவும் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக, தொலைப்பேசி எண்கள் கசிவது அல்லது விற்கப்படும் சம்பவங்கள் அதிகம் நிகழும் நாடுகள் பட்டியலில் மலேசியா முதலிடம் வகிக்கும் அதிர்ச்சி தகவல், அண்மையில் அனைத்துலக TrustTech நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடந்தாண்டு நெடுகிலும், நம் நாட்டில் செயல்படும் 73 விழுக்காட்டு தொலைப்பேசி எண்கள் அல்லது இரண்டு கோடியே 19 லட்சத்துக்கும் அதிகமான மலேசியர்களின் தனிப்பட்ட தரவுகள் கசிந்தன அல்லது மோசடி கும்பல்களிடம் விற்கப்பட்டதை, GOGOLOOK-கின் ஆண்டு மோசடி தரவு அறிக்கை குறிப்பிடுகிறது.

கடவு சொற்கள், பயன்களின் பெயர்கள், முகவரி, நாடு, பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி ஆகியவை அதிகம் கசிந்த அல்லது களவாடப்பட்ட தனிநபர் விவரங்களில் அடங்குமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொலைப்பேசி எண்கள் கசிவதால், ஒருவரது இணைய வங்கி விவரங்களையும், சமூக ஊடக விவரங்களையும் எளிதாக ஊடுருவி மோசடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

அதே சமயம், கடந்தாண்டு நெடுகிலும், நாட்டில் மொத்தம் 40 கோடியே 54 லட்சத்துக்கும் அதிகமான மோசடி அழைப்புகளும், குறுச்செய்திகளும் பதிவுச் செய்யப்பட்டது Whoscall எனும் செயலி வாயிலாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதனால், மோசடி கும்பல்கள் பயன்படுத்தும் புதிய யுக்திகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!