Latestமலேசியா

2023 ஆசிய கிண்ண காற்பந்து போட்டியில் ஹரிமாவ் மலாயா குழுவின் பைசால் அடித்த கோல் சிறந்த கோல் விருதை பெற்றது

கோலாலம்பூர், பிப் 27 – அண்மையில் நடைபெற்ற ஆகிய கிண்ண காற்பந்து போட்டியில் தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் Harimau Malaya அணியின் முன்னணி ஆட்டக்காரர் Faisal Abdul Halim அடித்த கோல் சிறந்த கோலுக்கான விருதைப் பெற்றது. Faisal சிறந்த கோலுக்கான விருதை வென்றதாக தனது சமூக வலைத்தளத்தில் ஆசிய காற்பந்து சம்மேளனமான AFC பதிவிட்டுள்ளது. Qatar , Doha-வில் தென் கொரிய குழுவுக்கு எதிரான குழு பிரிவுக்கான ஆட்டத்தில் 3-3 என்ற கோல் கணக்கில் Harimau Malaya சமநிலைக் கண்டது. முற்பகுத் ஆட்டத்தில் 0-1 என்ற நிலையில் பின்தங்கியிருந்த மலேசிய குழு கடுமையான போராட்டத்திற்குப் பின்ன அந்த ஆட்டத்தில் சமநிலைக் கண்டது.

சிலாங்கூரின் முன்னணி ஆட்டக்காரருமான 26 வயதுடைய Faisal அடித்த கோல் சிறந்த கோலாக தேர்வுபெற்றது. ஜனவரி 12 ஆம்தேதி தொடங்கி பிப்ரவரி 10ஆம் தேதிவரை நடைபெற்ற ஆசிக கிண்ண போட்டியின்போது அடிக்கப்பட்ட 132 கோல்களில் சிறந்த கோல் பட்டியலுக்கு 8 கோல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இணயம் வாயிலாக நடத்தப்பட்ட தேர்வில் Faisal அடித்த கோல் சிறந்த கோலாக தேர்வு பெற்றது.நேற்று முடிவுற்ற அந்த வாக்களிப்பில் மொத்தம் பெறப்பட்ட வாக்குகளில் 85 விழுக்காடு வாக்குகளை பினாங்கில் பிறந்து வளர்ந்தவரான Faisal பெற்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!