
பேருந்து, இரயில் சேவைகளை மேம்படுத்த Prasarana நிறுவனம் 280 கோடி ரிங்கிட்டை செலவிடவுள்ளது.
குறிப்பாக, இரயில் உபரிப் பாகங்களை மாற்றவும், பேருந்து சேவைகளை அதிகரிக்கவும் அந்த நிதி ஒதுக்கீடு பயன்படுத்தப்படவுள்ளது.
மாநகர் மக்களிடையே, பொது போக்குவரத்து சேவைக்கான தேவை அதிகரித்துள்ளதை அடுத்து, Prasarana நிறுவனத்தின் கீழுள்ள அனைத்து பொது போக்குவரத்து சேவைகளையும் தரம் உயர்த்தும் நிதியமைச்சின் கோரிக்கைக்கு ஏற்பட அந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக, Prasarana குழுமத்தின் தலைவரும், தலைமை செயல்முறை அதிகாரியுமான முஹமட் அசாருடின் மாட் ஷா தெரிவித்தார்.
கோவிட்-19 பெருந் தொற்று, ஒட்டு மொத்த விநியோக சங்கிலியை பாதிக்கச் செய்துள்ளது. அதற்கு Prasarana விதிவிலக்கு அல்ல.
அதனால், உபரிப் பாகங்கள் விநியோகிப்பில் ஏற்பட்டுள்ள தாமதம் இவ்வாண்டு மே மாதத்திற்குள் சரிசெய்யப்பட்டவுடன், இரயில் சேவைகள் தரம் உயர்த்தப்படுமென முஹமட் அசாருடின் தெரிவித்தார்.