காஜாங், ஆகஸ்ட்-13 – சிலாங்கூர், செமஞ்சேவில் ஒரு மாதத்திற்கு முன்பு இரவல் வாங்கிய மோட்டார் சைக்கிளைத் திருப்பிக் கேட்ட நண்பனுக்கு, கத்திக் குத்து பரிசாகக் கிடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று பிற்பகல் வாக்கில் செமஞ்சேவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
பாதிக்கப்பட்ட 23 வயது இளைஞரின் அக்கா வீட்டில் வைத்து ஏச்சு விழுந்ததால் சினமடைந்த ஆடவன், நேராக சமயலறைக்குச் சென்று கத்தியைக் கைப்பற்றி நண்பன் என்றும் பாராமல் துரத்தி துரத்தி குத்தியுள்ளான்.
இதனால் நண்பருக்கு இடுப்பின் பின்பக்கம் இரு குத்துகளும், இடது தோள்பட்டையில் ஒரு குத்தும் விழுந்தது.
காயங்களுடன் அவர் தற்போது காஜாங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
குத்தி விட்டு தப்பியோடிய ஆடவனை போலீஸ் தீவிரமாகத் தேடி வருகிறது.
நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சந்தேக நபருக்கு அதிகபட்சமாக பத்தாண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் பிரம்படி விதிக்கப்படலாம்.