
பெட்டாலிங் ஜெயா, ஜன 16 – பின்னிரவு வரை கைத்தொலைப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்ததற்காக, மகளை அடித்ததோடு, பாராங் கத்தியைக் கொண்டு வெட்டப் போவதாக மிரட்டியிருக்கின்றார் தந்தை ஒருவர்.
அந்த சம்பவம், Lembah Subang பகுதியில் நிகழ்ந்த வேளை, கோபத்தில் மூர்கத்தனமாக நடந்து கொண்ட அந்த தந்தையை, போலீசார் கைது செய்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் Mohamad Fakhrudin Abdul Hamid தெரிவித்தார்.
சம்பவத்தின் போது அந்த ஆடவர் , 15 வயதான தனது மகளை வார்பட்டையால் அடித்திருக்கின்றார். அவரது மகள் கொடுத்த புகாரிலே அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக Fakhrudin கூறினார்.