Latestஉலகம்

டயர் கழன்றி விழுந்ததால் அமெரிக்க விமானம் அவசரத் தரையிறக்கம்

சான் ஃபிரான்சிஸ்கோ, மார்ச்-8, அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் இருந்து ஜப்பானுக்குப் பயணமான Boeing 777 ரக விமானம், அதன் ஒரு டையர் கழன்றி விழுந்ததால், புறப்பட்ட வேகத்தில் அவசரமாகத் தரையிறங்கியது.

சான் ஃபிரான்சிஸ்கோ அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில வினாடிகளிலேயே, United Airlines நிறுவனத்துக்குச் சொந்தமான அவ்விமானத்தின் டையர் கழன்றி விழுவது, இணையத்தில் வைரலாகியுள்ள வீடியோவில் தெரிகிறது.

விமானத்தில் இருந்து கழன்றிய டையர் அங்குள்ள விமானப் பணியாளர்களின் கார் நிறுத்துமிடத்தில் விழுந்து ‘துள்ளித் துள்ளி’ ஓடியதில், பல கார்கள் சேதமடைந்தன.

ஜப்பானின் ஒசாக்கா நகரை நோக்கிப் பயணமான அவ்விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு திருப்பி விடப்பட்டு அங்குள்ள விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் இருந்த அனைத்து 249 பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக United Airlines உறுதிப்படுத்தியது.

போயிங் 777 ரக விமானம், அதன் பிரதான தரையிறங்கும் கியர் ஒவ்வொன்றிலும் ஆறு டயர்களைக் கொண்டுள்ளது; எந்த டயர் தொலைந்து விட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ பாதுகாப்பாக தரையிறங்கும் வகையில் அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

அண்மைய ஆண்டுகளாகவே தரக்கட்டுப்பாட்டு அம்சங்கள் குறித்த பிரச்னையை Boeing நிறுவனம் எதிர்நோக்கியுள்ளது.

தரக் கட்டுப்பாட்டு பிரச்னைகளைக் களைவதற்குண்டான திட்டங்களை முன் வைக்க, Boeing நிறுவனத்துக்கு அமெரிக்க தர மேலாண்மைத் தரப்பு கடந்த வாரம் தான் 90 நாட்கள் கால அவகாகம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!