கோலாலம்பூர், மார்ச் 2 – இரவு விடுதி மற்றும் பொழுது போக்கு விடுதியில் உல்லாசமாக பொழுதை கழிப்பதற்கு வந்த 44 பேர் SOP யை மீறிய குற்றத்திற்காக குற்றப் பதிவை பெற்றனர். தொற்று நோய் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சட்டத்தின் 17 ஆவது விதியை அந்த இரவு விடுதி மீறியிருப்பதும் தெரியவந்தாக கோலாலம்பூர் குற்றவியல் தடுப்பு மற்றும் சமூக பாதுகப்பு துறையின் தலைவர் டத்தோ Azman Ayob கூறினார்.
அந்த இரவு விடுதியின் உரிமையாளருக்கு 1,000 ரிங்கிட் அபராதமும் அந்த இரவு விடுதிக்கு வருகை புரிந்த 44 பேருக்குத் தலா 1.000 ரிங்கி அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் 45,000 ரிங்கிட் அபராதத்திற்கான குற்றப் பதிவு வழங்கப்பட்டதாக Azman Ayob தெரிவித்தார். இதனிடையே கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் இதுவரை பொழுதுபோக்கு விடுதியின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு சென்றவர்களுக்கு 451,000 ரிங்கிட் குற்றப்பதிவு வழங்கப்பட்டுள்ளதாக அஸ்மான் கூறினார்.