மூவார், ஆகஸ்ட் -25, ஜோகூர், மூவாரில் தந்தை மற்றும் சகோதரனின் சடலங்களோடு வீட்டில் ஒரு வார காலமாக பட்டினியில் கிடந்த மாற்றுத்திறனாளி பெண்ணின் கதை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சில நாட்களாகவே அவ்வீடு இருட்டில் மூழ்கிக் கிடந்ததோடு, அதிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தார் சந்தேகமடைந்தனர்.
அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு வந்த போலீஸ், 76 வயது தந்தை மற்றும் 37 வயது மகனது சடலங்களைக் கைப்பற்றியது.
தந்தையின் உடல் குளியலறையிலும், மாற்றுத்திறனாளியான மகனின் சடலம் வரவேற்பறை சோஃபாவிலும் கண்டெடுக்கப்பட்டன.
இரு சடலங்களும் சவப்பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
பட்டினியில் கிடந்த 44 வயது மகள் மிகவும் பலவீனமான நிலையில் மீட்கப்பட்டார்.
அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால், பொது மக்கள் யூகங்கள் எதனையும் எழுப்ப வேண்டாமென போலீஸ் கேட்டுக் கொண்டது.