லிப்பிஸ், ஏப் 26 – இரும்பு துண்டுகளை ஏற்றிச் சென்ற லோரி Jalan Lipis – Merapoh சாலையின் 55 ஆவது கிலோமீட்டரில் கவிழ்ந்ததில் அதன் ஓட்டுனரும் உதவியாளரும் மாண்டனர். இன்று காலை மணி 7.05 அளவில் அந்த விபத்து நிகழ்ந்தது.
கடுமையான காயத்திற்குள்ளான அந்த இருவரும் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்தனர் என Lipis மாவட்ட போலீஸ் தலைவர் Superintendent Azli Mohd Noor தெரிவித்தார். அந்த டிரெய்லர் லோரி Kuala Lipis சிலிருந்து Merapohவுக்கு சென்று கொண்டிருந்தபோது பள்ளமான இடத்தில் அந்த லோரி கட்டுப்பாட்டை இழந்ததால் அது கவிழ்ந்ததாக Azli Mohd Noor கூறினார்.