பெய்ஜிங், நவம்பர்-23,
சீனாவில் சைபீரியப் புலியிடம் சிக்கி அதற்கு இரையாவதிலிருந்து விவசாயி தப்பிய வீடியோ வைரலாகியுள்ளது.
CCTV கேமராவில் பதிவான காட்சிகளில், வீட்டுக்குள்ளிலிருந்து வெளியே வந்த முதியவர் இரும்பு வேலியைத் திறக்க முற்பட்ட போது, எங்கிருந்தோ வந்த சைபீரியப் புலி ஆக்ரோஷமாக பாய்ந்தது.
வேலியே உடையும் அளவுக்கு பலங்கொண்டு அதை மோதிவிட்டு ஓடிவிட்டது.
புலியைப் பார்த்த விவசாயி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தலைத்தெறிக்க ஓடுகிறார்.
அதே புலி, முன்னதாக 65 வயது முதியவரைத் தாக்கி அவரின் இடது கையை கிழித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அறுவை சிகிச்சையின் மூலம் அவரின் கையை மருத்துவர்கள் காப்பாற்றினர்.
இப்படி அடுத்தடுத்து 2 சம்பவங்கள் நடந்திருப்பதால் அக்கிராம மக்கள் பீதியில் உறைந்துப் போயிருக்கின்றனர்.
சீனக் காடுகளில், பாதுகாக்கப்பட்ட வனவிலங்கான சைபீரியப் புலிகளின் எண்ணிக்கை 70-தைத் தாண்டுமெனக் கூறப்படுகிறது.