ஈப்போ, பிப் 25 – இருவருக்கு காயம் விளைவித்ததாக 25 வயதுடைய லிங்கேஸ்வரன் என்ற இளைஞர் மீது இன்று குற்றஞ்சாட்டப்பட்டது. பி.நவனேஸ்வரன் மற்றும் என்.லஸ்மி ஆகியோருக்கு இம்மாதம் 19 ஆம் தேதி இரவு 11 மணியளவில் Buntong, Jalan Sekolah வில் காயம் விளைவித்தாக லிங்கேஸ்வரன் மீது ஈப்போ செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டது.
அவர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். 10,000 ரிங்கிட் ஜாமின் தொகையில் லிங்கேஸ்வரன் விடுவிக்கப்பட்டார். அவர் மீதான இந்த குற்றச்சாட்டு மறு வாசிப்புக்காக ஏப்ரல் 20 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை ஈப்போ Raja Permaisuri Bainun மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் குழப்பம் விளைவித்தது தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டனர்.