
குவந்தான், ஜூலை 2 -Jerantut , Kampung Batu Embun னில் பகாங் ஆற்றில் பதின்ம வயதுடைய இருவர் மூழ்கி மாண்டனர். 13 வயதுடைய Mohd Safwan மற்றும் Mohd Hanafi ஆகிய இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது நீரினால் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் பொது உறவுத்துறை அதிகாரி Zulfadli Zakaria உறுதிப்படுத்தினார். அந்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்ட பின் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.