Latestமலேசியா

இரு அரசு சார்பற்ற அமைப்புகள் தொடுத்துள்ள வழக்கை தள்ளுபடி செய்யும்படி ஜம்ரி வினோத் வழக்கு மனுத் தாக்கல்

கோலாலம்பூர், செப் 15 – இதர இனங்கள் மற்றும் சமயங்களை சிறுமைப்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்ட தமக்கு எதிராக அரசு சார்பற்ற இரண்டு அமைப்புகள் செய்துள்ள வழக்கை தள்ளுபடி செய்யும் படி முகமட் ஷம்ரி வினோத் காளிமுத்து வழக்கு மனுவை தாக்கல் செய்துள்ளார். ஷம்ரியை போலீஸ் கைது செய்து அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி வாதிகளான மலேசிய இந்து தர்ம மாமன்றம், மலேசிய இந்து இளைஞர் மன்றம் வழக்கு மனுவை தாக்கல் செய்திருந்தன.

அவர்கள் தங்களது வழக்கு மனுவில் பிரதிவாதிகளாக ஷம்ரி, அரச மலேசிய போலீஸ் படை, உள்துறை அமைச்சு, மற்றும் மலேசிய அரசாங்கம் ஆகியோரை பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிட்டிருந்தனர். தமது வழக்கறிஞர் மூலமாக கோலாலம்பூர் நீதிமன்றத்தில் அவர் ஷம்ரி வினோத் இந்த வழக்கு மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார், தமக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டதற்கு நியாயமான காரணம் தெரிவிக்கப்படவில்லை என்பதோடு அற்பமானதாகவும், தர்மசங்கடத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியிருப்பதாக ஷம்ரி தனது வழக்கு மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!