Latestமலேசியா

இரு அழகு சாதனப் பொருட்களில் பாதரசம் அடையாளம் காணப்பட்டுள்ளது

Karisma Turmeric Booster Cream, Flashhskinzz Treatment Cream ஆகிய இரு அழகுச் சாதனப் பொருட்களில் பாதரசம் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதனால் அவ்விரு பொருட்களுக்கான அனுமதியை தேசிய மருந்தக ஒழுங்குமுறை வாரியம் இரத்துச் செய்துள்ளதை, சுகாதார தலைமை இயக்குனர் டான் ஸ்ரீ நோர் ஹிசாம் அப்துல்லா உறுதிப்படுத்தினார்.

அதனால் அவ்விரு பொருட்களையும் வாங்கி பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

அதே சமயம், அவ்விரு பொருட்களையும் விற்பதை வணிகர்களும் தவிர்க்க வேண்டுமெனவும் நோர் ஹிசாம் வலியுறுத்தினார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 25 ஆயிரத்துக்கும் மேல் போகாத அபராதம் அல்லது சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!