
பேராக், டிச 30 – சித்தியவானுக்கு அருகே, மேற்குகரை நெடுஞ்சாலையில், நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
புரோட்டோன் சாகா காரும், Toyota Vios காரும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளான வேளை; Toyota Vios கார் சாலை தடுப்பின் மீது குடைசாய்ந்தது.
அவ்விபத்தில், Toyota Vios காரின் பயணிகள் இருக்கையில் சிக்கிக் கொண்ட இரு ஆடவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளை ; மற்றொருவர் காரிலிருந்து தூக்கியெறியப்பட்டதில் படுகாயமடைந்தார். எனினும், புரோட்டோன் சாகா கார் ஓட்டுனர் காயம் எதுவும் இன்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
காரின் கதவை வெட்டி, அதில் சிக்கிக் கொண்டிருந்த உயிரிழந்தவர்களின் உடல்களை தீயணைப்பு மீட்புப் படையினர் வெளியே கொண்டு வந்தனர்.