
ஈப்போ, அக் 11- இன்று நண்பகல் மணி 12:46 அளவில் சிம்பாங் பூலாய்- கேமரன் மலை சாலையில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 23 வயது பெண்ணும் அவரது மூன்று மாத குழந்தையும் உயிரிழந்தனர். மைவி காரில் பயணம் செய்த அவர்கள் இருவரும் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்தனர்.
அந்த விபத்தில் புரோடுவா மைவி காரும் மெர்சடிஸ் காரும் மோதிக்கொண்டன. அந்த புரோடுவா மைவி காரின் ஓட்டுனரான 23 வயதுடை ஆடவர் கடுமையாக காயம் அடைந்த நிலையில் காரில் சிக்கிக்கொண்டார். தீயணைப்பு வீரர்களின் உதவியோடு அந்நபர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மெர்சடிஸ் பென்ஸ் காரில் இருந்த மற்றொரு ஆடவர் காயம் அடைந்தார்.