
கிள்ளான், ஜன 10 – காப்பார், Taman Intan – னில் இரு கும்பல்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் கத்திக் குத்துக்கு உள்ளான ஆடவர் ஒருவர் மரணம் அடைந்தார். அதிகாலை மணி 2.04 அளவில் அந்த சம்பவம் குறித்து போலீசிற்கு தெரிவிக்கப்பட்டதாக வட கிள்ளான் ஓ.சி.பி.டி துணை கமிஷனர் S. Vijaya Rao தெரிவித்தார்.
போலீசார் அங்கு சென்றபோது தரையில் ஆடவர் ஒருவர் விழுந்த கிடந்ததோடு அங்கு வந்த மருத்துவ அதிகாரிகள் அந்த நபர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தியதாக அவர் கூறினார்.
இளைஞர்களைக் கொண்ட இரண்டு கும்பலுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து அந்த இடத்திலிருந்து சிறிது தொலைவில் இருந்த நபர் கத்தியால் குத்தப்பட்டதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக Vijaya Rao தெரிவித்தார்.
இந்த தகராறில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் இரு நபர்கள் அடையாளம் காணப்பட்டதோடு அவர்கள் தற்போது தேடப்பட்டு வருவதாகவும் அவர் விவரித்தார்.