
ஜொகூர், ஜாலான் குவந்தான் – செகாமாட் சாலையில் அதிகாலை மணி ஐந்து வாக்கில் நிகழ்ந்த, இரு டிரெய்லர்களை உட்படுத்திய சாலை விபத்தில், ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்தார்.
விபத்துக்குள்ளான டிரெய்லர் ஒன்றில் ஏற்றப்பட்டிருந்த இரும்பு குழாய்கள் விழுந்து மற்றொரு டிரெய்லரின் தலைப் பகுதியை மோதியதில், அதனை செலுத்திய 37 வயது அஹ்மட் ரிட்சுவான் உஸ்மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
டிரெய்லரில் சிக்கிக் கொண்டிருந்த அவர், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
எனினும், இரும்பு குழாய்களை ஏற்றி வந்த டிரெய்லர் ஓட்டுனரான 55 வயது யோங் போங் யூன் எனும் ஆடவர் கையில் சிராய்ப்பு காயத்துடன் உயிர் தப்பியதாக, ரொம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் டெபுடி சுப்ரிடெண்டன் மாட் அசாரி முக்தார் தெரிவித்தார்.
உயிரிழந்த ஓட்டுனர் செலுத்திய டிரெய்லர் கடுப்பாட்டை இழந்து எதிர்சாலையில் நுழைந்து, இரும்பு குழாய்களை ஏற்றியிருந்த டிரெய்லரை மோதி விபத்துக்குள்ளானது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் மாட் அசாரி சொன்னார்.