
கோலாப்பிலா, மே 3 – ஆயுதம் ஏந்திய கொள்ளையர்களிடம் நகை விநியோகிப்பாளர்களில் இருவர் 10 லட்சம் ரிங்கிட் நகையை இழந்தனர். கோலாப்பிலாவில் ஒரு நகைக்கடையின் பின்புறப் பகுதியில் அந்த கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்தது. நகை பைகளுடன் கடைக்கு வந்த அந்த இரு விநியோகிப்பாளர்களை முகமூடி அணிந்த இரண்டு ஆடவர்கள் தாக்கிய பின் அவர்களிடமிருந்து நகைகளை கொள்ளையிட்டதை கடையின் ரகசிய கண்காணிப்பு கேமராவின் மூலம் தெரியவந்ததாக அந்த நகைக்கடையின் நிர்வாகி Noorhasliza Abdul Rahman கூறினார். கடையின் பின்புறப் பகுதியில் திடீரென முதல் முறையாக நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தினால் அந்த இரு நகை விநியோகிப்பாளர்களும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானதாக அவர் தெரிவித்தார்.