திருவனந்தப்புரம், பிப் 9 – கேரளாவில், செங்குத்தான மலையின் இடையில் உள்ள குழியில், கடந்த இரு நாட்களாக சிக்கிக் கொண்ட ஆடவரை மீட்க, இறுதியில் ராணுவத்தின் உதவி நாடப்பட்டது.
தனது நண்பர்களுடன் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 23 வயது மலையேறி, திடீரென சறுக்கி, மலையில் நடுவில் உள்ள சிறிய குழிக்குள் மாட்டிக் கொண்டார்.
அவரைக் காப்பாற்ற சக நண்பர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அவை தோல்வியில் முடிந்ததை அடுத்து , அவர்கள் போலீஸ் , தீயணைப்பு மீட்பு படையினரை அழைத்தனர்.
அப்படையினராலும் , அந்த மலையேறியை மீட்பதில் சிக்கலை எதிர்நோக்கியதை அடுத்து, கேரள அரசாங்கம் உதவிக்கு ராணுவத்தை அனுப்பி வைத்தது.