Latestமலேசியா

இரு பண்டா குட்டிகள் மே மாதம் சீனாவிற்கு அனுப்பி வைக்கப்படவிருக்கின்றன

கோலாலம்பூர், மார்ச் 31 – தேசிய மிருகக் காட்சி சாலையில் உள்ள YI YI, Sheng Yi ஆகிய இரு அழகிய பண்டா குட்டிகளை சென்று பார்ப்பதற்கு, பொது மக்களுக்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் மட்டுமே வாய்ப்புள்ளது.

ஏனெனில், அந்த இரு குட்டிகளும் மே மாதம் சீனாவிற்கு திரும்பி அனுப்பி வைக்கப்பட்டு விடுமென , தேசிய மிருகக் காட்சி சாலையின் துணை இயக்குநர் Rosly@Rahmat Ahmat Lana தெரிவித்தார்.

சீனா, மலேசியா இடையிலான நட்பின் அடையாளமாக Xing Xing , Liang Liang ஆகிய இரு பண்டா கரடிகளை, மலேசியா பத்தாண்டு கால கடன் அடிப்படையில், 2014–இல் சீன அரசாங்கத்திடமிருந்து பெற்றது.

அந்த பண்டா ஜோடிகள் இதுவரை 3 குட்டிகளை ஈன்றுள்ளன. அதில் 2015 –இல் பிறந்த குட்டி ஈராண்டுக்குப் பின்னர் சீனாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போது மேலும் இரு குட்டிகள் திருப்பி அனுப்பி வைக்கப்படவிருப்பதாக Rosly தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!