திருவனந்தபுரம், பிப் 28 – போரினால் பாதிக்கப்படுவது என்னவோ இறுதியில் மக்களாகத்தான் இருப்பார்கள். அவ்வாறு உக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்டிருக்கும் படையெடுப்பால் கேரளாவைச் சேர்ந்த தம்பதியருக்கு துன்பம் மேல் துன்பம் வந்து சேர்ந்துள்ளது.
உக்ரேன், கீவ்வில் மருத்துவம் படித்து வரும் ஜிதினா (Jithina) என்பவர், ஏவுகணை தாக்குதல்களில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள பாதாள பகுதியில் பதுங்கியிருக்கிறார்.
25 வயதாகும் கப்பல் பணியாளரான அவரது கணவரோ, யெமெனில் (Yemen) நிகழும் உள்நாட்டிப் போரில், கிளர்ச்சிப் படையினரால் பிணை வைக்கப்பட்டிருக்கின்றார்.
இரு வேறு போரினால், ஒரு தம்பதியர் பிரிந்திருக்கும் நிலையில், அவ்விருவருடனான தொடர்பை இழந்து தவிக்க்கின்றனர் அத்தம்பதியரின் குடும்பத்தினர்.