பெக்கான், பிப் 24 – இரு Toyota Hilux வாகனங்கள் நேருக்கு நேராக மோதிக்கொண்ட விபத்தில் அதன் ஓட்டுநர்களில் ஒருவர் மாண்டார். Simpang Chini க்கு அருகே Jalan Kuantan – Segamat சாலையின் 61 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த அந்த விபத்தில் தெமர்லோவைச் சேர்ந்த 32 வயதுடைய ஓட்டுனர் மரணம் அடைந்தார்.
மற்றொரு Toyota Hilux வாகனத்தை ஓட்டிய 41 வயது நபரும் 21 வயது பயணியும் தலையில் காயம் அடைந்தனர் என பெக்கான் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Mohd Zaidi Mat Zin தெரிவித்தார்.