
ஈப்போ, ஜன 9 – நேற்றிரவு ஈப்போவில் Semanggol – லுக்கு அருகே Telok Rimba Simpang Empat – ட்டில் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற லோரியும் ஒரு காரும் மோதிக்கொண்ட விபத்தில் அந்த லோரியில் இருந்த ஒரு தாயும் அவரது மகனும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் கார் ஓட்டுனர் சொற்ப காயத்தோடு உயிர் தப்பினார்.
விபத்தில் மாண்ட, Satay ஏற்றிச் சென்ற லோரியை ஓட்டிய 37 வயது Shahren Ismail மற்றும் அவரது 64 வயது தாயார் Zainab Alias ஆகியோரின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.