Latestமலேசியா

இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி விலை உயர்கிறது

கோலாலம்பூர், செப் 3 – இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசிக்காக மலேசியர்கள் இனி ஒரு மாதத்திற்கு கூடுதலாக 21 ரிங்கிட் செலவிட வேண்டியிருக்கும். கடந்த வாரம் வெள்ளிக்கிழமையிலிருந்து ஒரு மெட்ரிட் டன் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி 36 விழுக்காடு அதிகரித்து 2,350 ரிங்கிட்டிலிருந்து 3,200 ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது என Bernas எனப்படும் Padi Beras Nasional Berhad தெரிவித்திருக்கிறது.

இதன்வழி பையில் இருக்கும் 10 கிலோ அரிசி விலை ஏழு ரிங்கிட் உயர்ந்திருப்பதாக பூமிபுத்ரா சில்லறை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ Ameer Ali Mydin தெரிவித்தார். ஒரு குடும்பத்தில் ஐவர் உறுப்பினராக இருப்பதன் அடிப்படையில் அவர் இந்த கணக்கை தெரிவித்துள்ளார். அவர்கள் தினந்தோறும் இரண்டு முறைய சோறு உட்கொள்கின்றனர். இதன்வழி நாள் ஒன்றுக்கு அவர்கள் 10 பிளேட் சோறு சாப்பிடுவதை தமது அனுமானம் இருப்பதாக Ameer Ali சுட்டிக்காட்டினார்.

ஒரு கிலோ அரிசியின் மூலம் 10 பிளேட் சோறு கிடைக்கும். இதன்வழி தினசரி 70 காசு என்றால் மாதந்தோறும் மக்கள் 21 ரிங்கிட் கூடுதலாக செலவிட வேண்டியுள்ளதாக அவர் கூறினார். 2,500 ரிங்கிட்டுக்கும் குறைந்த சம்பளத்தை பெறும் பி 40 எனப்படும் வருவாய் குறைந்த தரப்பினரின் சிரமத்தை குறைப்பதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் கூடுதல் செயல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென Ameer Ali கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!