
மோஸ்கோ, ஜூன் 23- ரஷ்யா, Bataysk-கில், இரு வாரங்களுக்கு முன்பு இறந்த பெண்ணின் உடல், அவர் வளர்த்து வந்த 20 பூனைகளுக்கு இறையாகியதைக் கண்டு, போலீசார் அதிர்ச்சியுற்றனர்.
அந்த பெண் இறந்து இரு வாரங்கள் ஆகியதால், நீண்ட நாட்கள் பசித்திருந்த அவரது 20 பூனைகள், வேறுவழியின்றி உரிமையாளரின் உடலையே உணவாக்கிக் கொண்டதாக தொடக்க விசாரணையில் தெரிய வந்தது.
பூனைகளை இனவிருத்தி செய்யும் தொழிலை செய்து வந்தவரான அந்த பெண்ணை நீண்ட நாட்கள் காணாததை அடுத்து, அவரது சக ஊழியர் போலீசில் தகவல் கொடுத்திருந்தார்.
அதையடுத்து , அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அப்பெண்ணின் சிதைந்த உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.