Latestஉலகம்

இறந்த கரப்பான் பூச்சிகள் உடலில் அழகிய ஓவியங்கள்

மனிலா, ஜன 13 – தூக்கியெறியும் ஒரு சிறு குப்பையாக இருந்தால்கூட அதனை கலைவண்ணமாக பார்த்து, மாற்றும் திறமையும் கற்பனை வளமும் கலைஞர்களுக்கு உண்டு.

அந்த வகையில், பிலிப்பைன்சைச் சேர்ந்த பெண் ஒருவர் இறந்த கரப்பான் பூச்சிகளின் உடலில் தனது ஓவியத் திறமையை வெளிப்படுத்தியிருப்பது பலரை வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கின்றது.

Caloocan நகரில் வசிக்கும் 30 வயதான Brenda Delgado தனது வீட்டைச் சுத்தப்படுத்தும்போது ஒரு சில இறந்த கரப்பான் பூச்சிகளைக் கண்டதையடுத்து, அவற்றின் உடல்களில் வண்ணங்களை வைத்து ஓவியம் தீட்டியிருக்கின்றார்.

பலர் அவரின் புத்தாக்கச் சிந்தனையைப் பாராட்டினாலும், இன்னும் சிலர் வாயில்லா பூச்சிகளையாவது விட்டு வையுங்கள் எனும் கருத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!