Latestஉலகம்

இறந்த பிச்சைக்கார பெண்; குடும்பத்தினருக்கு 1 லட்சம் ரூபாய் சொத்தை விட்டுச் சென்றார்

கொல்கத்தா, மார்ச் 4 – பிச்சைக்காரர் இறந்தால் பெரிதாக என்ன விட்டுச் செல்லப் போகிறார் என்கிறீர்களா ?

மேற்கு வங்காளத்தில், பிச்சை எடுப்பதை தொழிலாக கொண்டிருந்த பெண் ஒருவர் இயற்கையின் காரணமாக இறந்தப் பின், குடும்பத்தினருக்காக , ஆச்சரியப்படும் வகையில் மிகப் பெரிய தொகையை விட்டுச் சென்றிருக்கிறார்.

இறக்கும் தருவாயில், தனது இறுதிச் சடங்கிற்காக, கனிகா மஹந்தா என்பவர் தான் சேகரித்து வைத்துள்ள பொருட்களைத் தேடிப் பார்க்குமாறு தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
அதன்படி பைகளையும் பெட்டிகளையும் சோதனையிட்டதில், ஒரு லட்சம் ரூபாய் நாணயங்கள் கொட்டிக் கிடந்ததைக் கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியுற்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!