Latestமலேசியா

இறுதி ஊர்வலத்தில் ஹெலிகப்டர், குதிரைகள்; விதிமீறல் தொடர்பில் போலிஸ் விசாரணை

ஈப்போ, நவ  28- ஈப்போவில்,   ஹெலிகப்டர்  , குதிரைகள்  உடன்  வர  நடத்தப்பட்ட இறுதி ஊர்வலம் தொடர்பில் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

பேராக்கில்,  இந்தியர் பாரம்பரிய  உடைகளை விற்பனை செய்யும்   கடை உரிமையாளர் ஒருவரின் இறப்பை  அடுத்து  நடத்தப்பட்ட அந்த  இறுதி ஊர்வலம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில்  வைரலாகியுள்ளது.

அதன் தொடர்பில் போலீஸ் புகார் செய்யப்பட்டிருப்பதாக, பேராக் போலீஸ் தலைவர்  டத்தோ மியோர்   ஃபாரிடாலத்ராஷ்  வாஹிட் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட  தரப்பினர் ஊர்வலத்தை நடத்த அனுமதியை பெற்றிருந்தார்களா என கண்டறியப்படும் என்றாரவர்.

மலர்களை தூவியவாறு  ஹெலிகப்டர் தாழ்வாக பறந்து சென்றதற்கும் அவர்கள், வான் போக்குவரத்து தரப்பின் அனுமதியைப் பெற்றனரா என்பதும் விசாரிக்கப்படும்.

சம்பந்தப்பட்ட காணொளியில், இறந்தவரின் வீட்டிலிருந்து ,  அடக்கம் செய்யப்படும் பகுதி வரையில்   சிலர் குதிரைகளில் ஏறிச் செல்வதையும் காண முடிகிறது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!