
பினாங்கு, மார்ச் 12 – இலக்கவியல் அடிப்படையில் உயரிய பொருளாதார வளர்ச்சிக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் என மனித வள அமைச்சர் வி.சிவக்குமார் தெரிவித்தார். நாட்டின் இந்த இலக்கை நிறைவேற்றுவதற்கு வர்த்தக நிறுவனங்கள், தொழில்துறையினர் முழு கடப்பாட்டுடன செயல்படுவதோடு அவர்கள் இத்துறையில் தங்களது பணியாளர்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார். மனித வள அமைச்சின் ஆதரவோடு HRDP Corp ஏற்பாடில் பினாங்கில் இன்று தேசிய மனித மூலதன மாநாடு மற்றும் கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைத்தபோது சிவக்குமார் இதனை தெரிவித்தார்.
கடந்த ஆண்டு கோலாலாம்பூரில் நடைபெற்ற தேசிய மனித மூலதன மற்றும் கண்காட்சியில் அதில் கலந்துகொண்ட பேராளர்கள் மற்றும் தொழில்துறையினரிமிருந்து அபரிதமான வரவேற்பை பெற்றதையும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாண்டு பினாங்கு, பேரா , கெடா மற்றும் பெர்லீசில் தேசிய மனித மூலதான மாநாடு மற்றும் கண்காட்சியின் மூலம் ஆக்கப்பூர்வ பயனை கொண்டு வருவதற்கு HRDP Corp மேற்கொண்டுவரும் முயற்சிகளையும் சிவக்குமார் பாராட்டினார்.