Latestமலேசியா

இலக்கிடப்பட்ட டீசல் மானியத் திட்டத்தில் காணப்படும் பலவீனங்களை திருத்திக் கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது ; கூறுகிறார் பிரதமர்

புக்கிட் மெர்தாஜாம், ஜூன் 18 – இலக்கிடப்பட்ட டீசல் மானிய செயலாக்கத்தில் கண்டறியப்பட்டுள்ள பலவீனங்களை திருத்திக் கொள்ள அல்லது மேம்படுத்திக் கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது.

தற்சமயம் அத்திட்டம் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் வேளை ; அதில் சில குறைப்பாடுகள் ஏற்படுவது இயல்பு தான் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

இலக்கிடப்பட்ட டீசல் மானியம் என்பது, நாட்டிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் தவறான பயன்பாடு மற்றும் திருட்டு பிரச்சனைகளை கையாளும் ஒரு நியாயமான நடவடிக்கை ஆகும்.

பலரால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை அரசாங்கம் உணர்ந்திருக்கும் போதிலும், தேசிய நிதி முறைக்கேட்டை தவிர்க்க அது மிகவும் முக்கியமானதாகும்.

வரிய நிலையிலுள்ள அல்லது வசதி குறைந்த விவசாயிகள், மீனவர்கள், சிறு தோட்டக்காரர்கள், பள்ளி அல்லது பொது பேருந்து உரிமையாளர்கள் அல்லது ஓட்டுனர்ளுக்காக இந்த இலக்கிடப்பட்ட டீசல் உதவித் தொகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெரும் பணக்காரர்களுக்காக அல்ல என்பதையும் பிரதமர் தெளிவுப்படுத்தினார்.

நாட்டு மக்கள் வருமான வரி செலுத்தும் வேளை ; இதுவரை நாட்டிலுள்ள 38 லட்சம் அந்நிய நாட்டவர்கள், அரசாங்கத்தின் உதவித் தொகையை அனுபவித்து வந்துள்ளனர்.

இரு நாட்களுக்கு முன், சிங்கப்பூர் சுற்றுலா பேருந்து நடத்துனர்களும் சுற்றுலா நிறுவனங்களும், டீசல் உதவித் தொகை மீட்டுக் கொள்ளப்பட்டதால், விலையை உயர்ந்த போவதாக அறிவித்திருந்ததையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

பல ஆண்டுகளாக அரசாங்கம் வழங்கும் உதவித் தொகையை, சிங்கப்பூர் நிறுவனங்களும், தாய்லாந்து மீனவர்களும் அனுபவித்து வருவதற்கு அது தக்க சான்றெனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!