இலங்கை, ஆகஸ்ட் 22 – சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முயற்சியில், 35 நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்களுக்கான சுற்றுலா விசா கட்டணத்தை தள்ளுபடி செய்ய இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அக்டோபர் 1ஆம் திகதி முதல் 6 மாதங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மலேசியா, சீனா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட 35 நாடுகளின் மக்களுக்கு இலவச விசா வசதியின் கீழ் இலங்கை நாட்டுக்குள் நுழைய இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சுற்றுலாத் துறையை மேம்படுத்தி, நெருக்கடியில் சிக்கியுள்ள அதன் பொருளாதாரத்தை மிட்டெடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.