
தோக்யோ, மார்ச் 7 – குடிநுழைவுத் துறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை பெண் ஒருவர் மரணம் அடைந்தது தொடர்பில் அந்த பெண்ணின் குடும்பத்தினர் ஜப்பானிய அரசாங்கத்திற்கு எதிராக இழப்பீடு கோரி வழக்கு தொடுத்தனர்.
33 வயதுடைய Wishma Sandamali ஒரு ஆண்டுக்கு முன்னர் குடும்ப வன்முறை தொடர்பாக Tokyo வில் போலீஸ் புகார் செய்யச் சென்றபோது விசா கால அவகாசத்தையும் மீறி ஜப்பானில் தங்கியிருந்ததற்காக அவரை குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது Sandamali பல முறை வயிற்று வலி என கூறியபோதிலும் அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை வழங்கப்படாததால் அவரது குடும்பத்தினர் 156 மில்லியன் Yen இழப்பீடு கோரி வழக்கு தொடுத்துள்ளனர்.